மக்காச்சோளம் அறுவடை பணிகள் தீவிரம்


மக்காச்சோளம் அறுவடை பணிகள் தீவிரம்
x

ஆலங்குளம் பகுதியில் மக்காச்சோளம் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விளைச்சல் நன்றாக இருப்பதாக விவசாயிகள் கூறினர்.

விருதுநகர்

ஆலங்குளம்,

ஆலங்குளம் பகுதியில் மக்காச்சோளம் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விளைச்சல் நன்றாக இருப்பதாக விவசாயிகள் கூறினர்.

மக்காச்சோளம் சாகுபடி

ஆலங்குளம் பகுதியில் ெதாம்பகுளம், ரெட்டியபட்டி, கொங்கன்குளம், வலையபட்டி, கல்லமநாயக்கர்பட்டி, காக்கிவாடன்பட்டி, எதிர்கோட்டை, மேலாண்மறைநாடு, அப்பயநாயக்கர்பட்டி, கீழாண்மறைநாடு, ஏ.லட்சுமிபுரம், கோபாலபுரம், புளியடிபட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

மக்காச்சோளத்தை விவசாயிகள் விரும்பி சாகுபடி செய்கின்றனர். தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அறுவடை பணிகள் தீவிரம்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

ஆலங்குளம் பகுதிகளில் எண்ணற்ற விவசாயிகள் மக்காச்சோளத்தை சாகுபடி செய்துள்ளனர். தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எந்திரம் மூலமாகவும், ஆட்கள் மூலமாகவும் சோளம் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விளைச்சல் நன்றாக உள்ளது. ஆதலால் ஒரு ஏக்கருக்கு குவிண்டால் 25 முதல் 30 வரை மக்காசோளம் மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். ஒரு குவிண்டால் ரூ.2,300 வரை வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். எனினும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் மக்காச்சோளத்தை அரசு நேரடி கொள்முதல் செய்தால் விவசாயிகள் மேலும் பயன்பெறுவர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story