மக்காச்சோளம் அமோக விளைச்சல்


மக்காச்சோளம் அமோக விளைச்சல்
x
தினத்தந்தி 17 Feb 2023 12:30 AM IST (Updated: 17 Feb 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

இடையகோட்டை பகுதியில் மக்காச்சோளம் அமோக விளைச்சல் அடைந்துள்ளது.

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம், இடையக்கோட்டை, மார்க்கம்பட்டி, கள்ளிமந்தையம், அப்பியம்பட்டி நால்ரோடு, கூத்தம்பம்பூண்டி, பொருளூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காய்கறி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் சோளம், மக்காச்சோளம், வாழை உள்ளிட்ட பயிர் சாகுபடியிலும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது அங்கு மக்காச்சோளம் அமோக விளைச்சல் அடைந்துள்ளது. மக்காச்சோள அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளத்தை களங்களில் காய வைக்கும் பணியும் நடந்து வருகிறது. ஒரு குவிண்டால் மக்காச்சோளம் ரூ.2 ஆயிரம் வரை தற்போது கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த விலை விவசாயிகளுக்கு கட்டுப்படியாகவில்லை என்று கூறப்படுகிறது. ஒரு குவிண்டால் ரூ.2,500-க்கு விற்பனை ஆனால் தான் ஓரளவு லாபம் கிடைக்கும் என்று விவசாயிகள் கூறுகின்றனர். எனவே கூடுதல் விலை கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.


Next Story