புத்தாண்டை முன்னிட்டு கருஞ்சிறுத்தை வடிவ 'கேக்' செய்து அசத்தல்


புத்தாண்டை முன்னிட்டு கருஞ்சிறுத்தை வடிவ கேக் செய்து அசத்தல்
x
தினத்தந்தி 1 Jan 2023 12:15 AM IST (Updated: 1 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் அருகே புத்தாண்டை முன்னிட்டு பேக்கரி கடைக்காரர் ஒருவர், கருஞ்சிறுத்தை வடிவ ‘கேக்’ செய்து அசத்தி உள்ளார்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் பேக்கரி கடை நடத்தி வருபவர் சம்பத். இவர் புத்தாண்டை முன்னிட்டு தனது கடையில் கருஞ்சிறுத்தை வடிவில் தத்ரூபமாக 'கேக்' தயாரித்து உள்ளார். 16 கிலோ எடை கொண்ட அந்த கேக் கருஞ்சிறுத்தை ஆக்ரோஷமாக உறுமுவது போன்று வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அந்த கேக்கில் கருஞ்சிறுத்தையின் கண்கள், பற்கள், நகங்கள் மற்றும் அது வீற்றிருக்கும் புல்தரை என்று அனைத்தும் உண்ணக்கூடிய பொருட்களைக் கொண்டே உருவாக்கப்பட்டு உள்ளது. அந்த பிரமாண்ட கேக்கை அப்பகுதி பொதுமக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர். அதன் அருகில் நின்று செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

இதுகுறித்து சம்பத் கூறுகையில், 'புத்தாண்டை முன்னிட்டு வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கருஞ்சிறுத்தை வடிவில் பிரமாண்ட கேக் தயாரித்து உள்ளேன். இதற்காக பெல்ஜியம் ேபான்ற நாடுகளில் இருந்தும் கேக் தயாரிப்பதற்கான பல்வேறு மூலப்பொருட்களை வாங்கி உள்ளேன். ஆண்டுதோறும் விழா காலங்களில் இதுபோன்று வித்தியாசமான வடிவிலான கேக்கை தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறேன்' என்றார்.


Next Story