மலைமாதா ஆலய திருவிழா கொடியேற்றம்


மலைமாதா ஆலய திருவிழா கொடியேற்றம்
x

தெற்கு கள்ளிகுளம் மலைமாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருநெல்வேலி

வள்ளியூர் (தெற்கு):

தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா திருத்தல களிகை மலைமாதா ஆலய திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி திருவிழா புனிதக்கொடியை ஆலய தர்மகர்த்தா ஜெபஸ்டின் ஆனந்த் தலைமையில் பொதுமக்கள் அதிசய பனிமாதா திருத்தலத்தில் இருந்து பவனியாக மாதா பொற்பாதம் பதித்த புனித மலைக்கு எடுத்து வந்தனர்.

தொடர்ந்து பங்குத்தந்தை ஜெரால்டு ரவி, திசையன்விளை பங்குத்தந்தை அந்தோணி டக்ளஸ், அருட்தந்தை மரிய அரசு, கள்ளிகுளம் உதவி பங்குத்தந்தை சிபு ஜோசப் ஆகியோர் ஜெபம் செய்து கொடியை அர்ச்சித்தவுடன் அதனை தர்மகர்த்தா ஏற்றி வைத்தார். பின்னர் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து அனைவருக்கும் அசன விருந்து வழங்கப்பட்டது.

தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. 9-ம் திருவிழா இரவில் அன்னையின் சப்பர பவனி நடைபெறும். விழா ஏற்பாடுகளை தர்மகர்த்தா ஜெபஸ்டின் ஆனந்த் தலைமையில் நிர்வாகக் குழுவினர், பங்குதந்தை, உதவி பங்குத்தந்தை மற்றும் இறைமக்கள் செய்துள்ளனர்.


Next Story