மாலையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
கோவில்பட்டி மாலையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வணிக வைசிய சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட செல்வ விநாயகர், அலமேலு மங்கா, பத்மாவதி சமேத வெங்கடேச பெருமாள், மகேஸ்வரர் சமேத மாலையம்மன் கோவில்கள் கும்பாபிஷேகவிழா கடந்த 18-ந் தேதி கால்நாட்டு வைபத்துடன் தொடங்கியது. கடந்த 25-ந் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை 7 மணிக்கு செல்வ விநாயகர், அலமேலு மங்கை, பத்மாவதி, வெங்கடேச பெருமாள் கோவில்களில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகேஸ்வரர் சமேத மாலை யம்மன் கோவிலில் விமான கோபுரம், மூலஸ்தானம் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு பூஜை மற்றும் புஷ்பாஞ்சலி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வணிக வைசிய சங்க தலைவர் வெங்கடேஷ், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் தங்க மாரியப்பன், துணை தலைவர் பரமசிவம், முன்னாள் தலைவர்கள் காளியப்பன், பூவலிங்கம், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ, கோவில்பட்டி நகரசபை தலைவரும், நகர தி.மு.க. செயலாளருமான கா. கருணாநிதி, விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், பேரூராட்சி தலைவர் அய்யன்ராஜ், கடம்பூர் இளைய ஜமீன்தார் ஜெகதீஸ் ராஜா, விளாத்திகுளம் ரூபம் வேலவன், நகரசபை கவுன்சிலர்கள், மாலை அம்மன் பஜனை குழுவினர், இந்து தேசிய கட்சி நிறுவனர் பேட்டை மணி மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.