அமைச்சர் உதயநிதியை நேரில் சந்தித்த மலேசிய அமைச்சர் - மலேசியா நாட்டிற்கு வர அரசு சார்பில் அழைப்பு
மலேசியா அமைச்சர் சிவக்குமார் வரதராஜன் சென்னை தலைமைச் செயலகத்தில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார்.
சென்னை,
மலேசியா நாட்டைச் சேர்ந்த மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் சிவக்குமார் வரதராஜன் சென்னை தலைமைச் செயலகத்தில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிவக்குமார் வரதராஜன், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் விளையாட்டு துறை சம்பந்தமாக பேசியதாக கூறினார். மலேசியா நாட்டிற்கு நேரில் வர வேண்டும் என அழைப்பு விடுத்ததாகவும் அவர் கூறினார்.
விளையாட்டு துறை சார்ந்த புதிய திட்டங்களை கொண்டு வருவது குறித்து மலேசியாவில் ஆலோசனை நடத்த அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
Related Tags :
Next Story