தூக்கில் ெதாங்கிய நிலையில் ஆண் பிணம்
தக்கலை அருகே தூக்கில் ெதாங்கிய நிலையில் ஆண் பிணம்
கன்னியாகுமரி
தக்கலை,
தக்கலை அருகே உள்ள கீழமூலச்சல் பகுதியை சேர்ந்தவர் முத்துநாதன். இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இதில் இளைய மகன் பிரசாத் (வயது 40) தவிர அனைவருக்கும் திருமணமாகி விட்டது.
இந்த நிலையில் நேற்று காலையில் தக்கலை அருகே உள்ள மையக்கோட்டை மயிலாடும் பொற்றையில் உள்ள ஆலமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிரசாத் பிணமாக கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் தக்கலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து பிரசாத் இறந்தது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story