அழுகிய நிலையில் ஆண் பிணம்
அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது.
சிவகங்கை
திருப்பத்தூர்,
திருக்கோஷ்டியூர் அருகே உள்ள பைக்குடிபட்டி பாலத்தில் தண்ணீரில் மூழ்கி அழுகிய நிலையில் ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக அவ்வழியாக சென்றவர்கள் திருக்கோஷ்டியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
அதில் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. மேலும் அவர் இறந்து 2 நாட்கள் இருக்கும் எனவும், இதனால் உடல் அழுகிய நிலையில் உள்ளது எனவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் இறந்தவர் வெள்ளை கோடு போட்ட சட்டை, அரக்கு கலர் கைலி அணிந்திருந்தார். அவரது உடலை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக போலீசார் அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story