தூக்கில் ஆண் பிணம்


தூக்கில் ஆண் பிணம்
x
தினத்தந்தி 16 Feb 2023 12:15 AM IST (Updated: 16 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கெலமங்கலம் அருகே தூக்கில் ஆண் பிணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை

கெலமங்கலம் அருகே உள்ள தொட்டேகானப்பள்ளி பகுதியில் மரத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் மஞ்சுகுமார் கெலமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக தொங்கியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story