கிணற்றில் அழுகிய நிலையில் மிதந்த ஆண் பிணம்


கிணற்றில் அழுகிய நிலையில் மிதந்த ஆண் பிணம்
x

வேலூர் அருகே கிணற்றில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது. அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்

வேலூர்

வேலூரை அடுத்த உடையார்பாளையத்தில் அரியூர்-ஊசூர் செல்லும் சாலையோரத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணமாக மிதந்து கொண்டிருந்தார். இதைக்கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அரியூர் போலீசார் சென்று பார்வையிட்டு உடலை கயிறு கட்டி கிணற்றின் மேலே கொண்டு வந்தனர். இறந்த நபர் கருநீல நிற கட்டம் போட்ட சட்டையும், மெரூண் நிறத்தில் பேண்ட் அணிந்திருந்தார். உடல் அழுகிய நிலையில் இருந்தது. இதுகுறித்து போலீசார் அந்த பகுதியில் விசாரணை நடத்தினர். ஆனால் இறந்தநபர் குறித்து எவ்வித விவரமும் கிடைக்கவில்லை.

இதையடுத்து போலீசார் அந்த உடலை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் சாந்தகுமார் வழக்குப்பதிந்து இறந்த நபர் யார்?, எந்த பகுதியை சேர்ந்தவர்?, அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டரா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்று விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story