கல்குவாரி குட்டையில் ஆண் பிணம்


கல்குவாரி குட்டையில் ஆண் பிணம்
x

காட்பாடி கல்குவாரி குட்டையில் ஆண் பிணம் கிடந்தது.

வேலூர்

காட்பாடியில் வேலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தின் அருகில் கல்குவாரி குட்டைகள் உள்ளன. இதில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதில் சில பேர் இறங்கி நீச்சல் பழகி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று ஒரு கல்குவாரி குட்டையில் ஆண் பிணம் மிதந்தது. இதுகுறித்து காட்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவருக்கு சுமார் 35 வயது இருக்கும். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? குட்டையில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாராவது கொலை செய்து வீசினார்களா என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story