கோவில் அருகே ஆண் பிணம்
தேரிவிளையில் கோவில் அருகே ஆண் பிணம்
தென்தாமரைகுளம்,
அகஸ்தீஸ்வரம் அருகே சுக்குப்பாறை தேரிவிளையில் சிவசுடலைமாடசாமி கோவில் உள்ளது. நேற்று மாலை இந்த கோவிலின் பின்புறம் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் பிணம் கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுபற்றி தென்தாமரைகுளம் போலீசாருக்கு தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணமாக கிடந்தவரை பார்வையிட்டனர். பிணமாக கிடந்தவருக்கு சுமார் 50 வயது இருக்கும். அவரது கழுத்தில் மருத்துவ சிகிச்சை எடுத்தற்கான அடையாளங்கள் இருந்தன. ஆனால் அவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அதைதொடர்ந்து போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து யார் அவர்?, நோய் பாதிப்பு காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.