வாய்க்காலில் ஆண் பிணம்
மெலட்டூர் அருகே வாய்க்காலில் ஆண் பிணம் கிடந்தது. அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தஞ்சாவூர்
மெலட்டூர்;
பாபநாசம் தாலுகா, மெலட்டூர் அருகே ரெங்கவாதபுரம் பகுதியில் வாய்க்காலில் ஒருவர் பிணமாக கிடப்பதாக மெலட்டூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.விசாரணையில் பிணமாக கிடந்தவர் தஞ்சை அருகே உள்ள கரந்்தை வேலூர் பகுதியை சேர்ந்த ராஜராஜன்( வயது43) என்றும், களஞ்சேரி பகுதியில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சிக்கு சென்ற ராஜராஜன் வீடு திரும்பிய போது அவர் வந்த மோட்டார் சைக்கிள் ரெங்கநாதபுரம் அருகே கட்டுபாட்டை இழந்து வாய்க்காலில் பாய்ந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து மெலட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story