உலக மலேரியா தின விழிப்புணர்வு முகாம்
உலக மலேரியா தின விழிப்புணர்வு முகாம் நடந்தது.
கும்பகோணம் வட்டார பொது சுகாதார துறை சார்பில் மகாமக குளம் அருகே உள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு உலக மலேரியா தின விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் ரோசாரியா தலைமை தாங்கினார். பட்டீஸ்வரம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சங்கரன் தலைமையிலான சுகாதாரக் குழுவினர் கலந்து கொண்டு மலேரியா காய்ச்சல் பரவும் முறை, அறிகுறிகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தனர். மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மலேரியா காய்ச்சலுக்கு, அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக ரத்த பரிசோதனை செய்து சிகிச்சையும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. முகாமில் சுகாதார ஆய்வாளர்கள் கோமதி, விக்னேஷ், அஸ்வின் மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.