புதர் மண்டி கிடக்கும் மல்லான் குளம்


புதர் மண்டி கிடக்கும் மல்லான் குளம்
x

கும்பகோணத்தில் புதர் மண்டி கிடக்கும் மல்லான் குளத்தை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

கும்பகோணம்:

கும்பகோணத்தில் புதர் மண்டி கிடக்கும் மல்லான் குளத்தை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மல்லான் குளம்

கும்பகோணம் தஞ்சை மெயின் சாலையில் கும்பகோணத்தின் மேற்கு எல்லை பகுதியில் சந்தான கோபாலசாமி கோவிலுக்கு சொந்தமான மல்லான்குளம் அமைந்துள்ளது.இந்த குளம் கடந்த பல ஆண்டுகளாக எந்தவித பராமரிப்பும் இல்லாமல் செடி, கொடிகள், வெங்காய தாமரை செடிகள் வளர்ந்து புதர் போல் காட்சி அளிக்கிறது.

புதர் மண்டி கிடக்கிறது

இந்த குளத்தை சுற்றி குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால் இந்த பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் புதர்கள் மண்டி கிடப்பதால் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாடுகின்றன. இங்கிருந்து விஷஜந்துகள், அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன.இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே இந்த குளத்தை முழுமையாக தூர்வாரி கரைகளை பலப்படுத்தி நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைபாதை அமைக்க வேண்டும்.

நடவடிக்கை

மேலும் நடைபாதையில் முதியவர்களின் வசதிக்காக இருக்கைகள் மற்றும் மின் விளக்குகள் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story