அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி பொதுமக்கள் போராட்டம் மல்லசமுத்திரத்தில் பரபரப்பு

அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து  வீடுகளில் கருப்புக்கொடி கட்டி பொதுமக்கள் போராட்டம்  மல்லசமுத்திரத்தில் பரபரப்பு
x

அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி பொதுமக்கள் போராட்டம் மல்லசமுத்திரத்தில் பரபரப்பு

நாமக்கல்

எலச்சிபாளையம்:

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தில் பழமைவாய்ந்த சோளீஸ்வரர், அழகுராய பெருமாள், செல்லியம்மன் உள்ளிட்ட கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களை குறிப்பிட்ட சமுதாயத்தினர் நிர்வகித்து வருகின்றனர். இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் இருந்து வந்த நிலையில் கோவில்களில் ஆனி மூல தேரோட்டம் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது.

இதற்கிடையே பொதுமக்கள் சார்பில் தேரோட்டம் நடத்துவது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதாவது கோவிலுக்கு தனி செயல் அதிகாரியை நியமிக்க வேண்டும். அனைத்து சமுதாயத்தினரும் பங்கேற்கும் குழு அமைத்து தேரோட்டத்தை நடத்த வேண்டும் என்பதாகும்.

இதுதொடர்பாக உதவி கலெக்டர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அறநிலையத்துறை அதிகாரிகளை கொண்டு தேரோட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இது பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் கோவில்களின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று சுமார் 600 வீடுகளில் பொதுமக்கள் கருப்புக்கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனால் மல்லசமுத்திரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Next Story