மல்லிப்பட்டினம் ஜமாத் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா


மல்லிப்பட்டினம் ஜமாத் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
x
தினத்தந்தி 25 July 2023 12:15 AM IST (Updated: 25 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சேதுபாவாசத்திரம் அருகே மல்லிப்பட்டினம் ஜமாத் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம்:

சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மல்லிப்பட்டினத்தில் ஜமாத் தேர்தல் நடைபெற்றது. இதில் கே.எம்.எம். அல்லா பிச்சை தலைமையிலான அணி வெற்றி பெற்றது. அதன் பிறகு நிர்வாகிகள் அனைவரும் பதவியேற்றுக்கொண்டனர். பதவி ஏற்பு விழாவில் கே.எம்.எம். அல்லா பிச்சை ஜமாத் தலைவராகவும், எம்.கே.எல். முகமது அப்துல் காதர், எம்.என். அப்துல் அஜீஸ் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், ஏ.அப்துல் ரஹீம் செயலாளராகவும், என்.எம்.கே. அப்துல் மஜீது, எம்.கே.எஸ்.சகாப்தீன் ஆகியோர் துணை செயலாளர்களாகவும், ஏ.நூருல் இஸ்லாம் பொருளாளராகவும், டி.எம். முகமது ராவுத்தர், கே. பாவா முகைதீன், ஏ.எஸ்.ஏ.நிஜாமுதீன் ஆகியோர் நிர்வாக குழு உறுப்பினர்களாகவும் பதவி ஏற்றுக்கொண்டனர். முடிவில் ஜமாத் தலைவர் கே.எம்.எம். அல்லா பிச்சை மல்லிப்பட்டினம் ஜமாத்தார்களுக்கு புதிய நிர்வாகிகள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொண்டார்.


Next Story