மல்லூரில், அ.தி.மு.க. சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்-ஆர்.இளங்கோவன் பங்கேற்பு


மல்லூரில், அ.தி.மு.க. சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்-ஆர்.இளங்கோவன் பங்கேற்பு
x

மல்லூரில், அ.தி.மு.க. சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோவன் பங்கேற்று பேசினார்.

சேலம்

பனமரத்துப்பட்டி:

சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் மல்லூரில் நேற்று நடந்தது. புறநகர் மாவட்ட மாணவர் அணி செயலாளர் தமிழ்மணி தலைமை தாங்கினார். சந்திரசேகரன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜமுத்து, நல்லதம்பி, ஜெயசங்கரன், சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன், கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலசந்திரன் ஆகியோர் வரவேற்றனர்.

கூட்டத்தில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவருமான இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையே நடக்கும் தேர்தல். அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டனர். அங்கு எடப்பாடி பழனிசாமி யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அவரது வெற்றி உறுதியாகி விட்டது என்றார்.

கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்கள் திலீபன், சாந்தி, காவேரி மணியம், ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஒன்றிய செயலாளர்கள் வருதராஜ், வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேரூர் செயலாளர்கள் வெங்கடாசலம், சின்னதம்பி ஆகியோர் நன்றி கூறினர்.


Next Story