திருப்பூரில் 10 சதவீத கமிஷனுக்கு 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றித்தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்த அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூரில் 10 சதவீத கமிஷனுக்கு 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றித்தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்த அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
x

திருப்பூரில் 10 சதவீத கமிஷனுக்கு 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றித்தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்த அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்

பெருமாநல்லூர்

திருப்பூரில் 10 சதவீத கமிஷனுக்கு 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றித்தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்த அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ரூ.30 லட்சம் மோசடி

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 32). கொங்குநாடு ஜனநாயக கழகத்தின் மாநில பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். இவர் திருப்பூர் பொங்குபாளையத்தை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் சபரிநாதன் (30) என்பவரை தொடர்பு கொண்டு, தன்னிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருப்பதாகவும், அதற்கு பதிலாக 500 ரூபாய் ேநாட்டுகள் வேண்டும் என்றும், இதற்கு 10 சதவீத கமிஷன் தருவதாக கூறினார். இதனால் கமிஷனுக்கு ஆசைப்பட்ட சபரிநாதன் ரூ.30 லட்சம் (500 ரூபாய் நோட்டு கட்டுகள்) எடுத்து தயார் நிலையில் வைத்து ஜெயராமனுக்காக காத்திருந்தார்.

சிறிது நேரத்தில் ஜெயராமன் தன்னுடன் கொங்குநாடு ஜனநாயக கழகத்தின் மாநில பொருளாளரான போயம்பாளையத்தை சேர்ந்த சிவராமன் (36) என்பவரை அழைத்துக்கொண்டு அங்கு வந்தார். பின்னர் அங்கிருந்து ஜெயராமன், சிவராமன் மற்றும் சபரிநாதன் ஆகிய 3 பேரும் அய்யம்பாளையத்தை சேர்ந்த அ.தி.மு.க. ஒன்றிய பாசறை செயலாளர் சந்திரசேகர் வீட்டிற்கு சென்றனர். அங்கு சென்றதும் சபரிநாதனிடம் இருந்து ரூ.30 லட்சத்தை வாங்கிக்கொண்டு ஜெயராமனும், சிவராமனும், சந்திரசேகரின் வீட்டிற்குள் சென்றனர். ஆனால் பணத்தை கொடுத்த நிதி நிறுவன அதிபரான சபரிநாதன் வீட்டிற்கு வெளியே நின்றார். ஆனால் பணத்தை கொண்டு உள்ளே சென்ற ஜெயராமனும், சிவராமனும் அதன்பின்னர் வெளியே வரவில்லை. அவர்கள் வருவார்கள், வருவார்கள் என வீட்டிற்கு வெளியே காத்திருந்த சபரிநாதனுக்கு ஏமாற்றம் மிஞ்சியது. இதையடுத்து சந்திரசேகர் வீட்டிற்குள் சபரிநாதன் சென்று பார்த்தார். அப்போதுதான் அங்கு சந்திரசேகர் மட்டும் இருந்தார். ஜெயராமனையும், சிவராமனையும் காணவில்லை. அவர்கள் 2 பேரும் ரூ.30 லட்சத்தை பின்வாசல் வழியாக கொண்டு ஓடிவிட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சபரிநாதன் பெருமாநல்லூர் போலீசில் புகார் செய்தார்.

அ.தி.மு.க.பிரமுகர் உள்பட 3 பேர் கைது

அந்த புகாரில் ெஜயராமன், சிவராமன் மற்றும் சந்திரசேகர் ஆகிய 3 பேரும் சேர்ந்து ரூ. 30 லட்சத்தை மோசடி செய்து விட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா வழக்குப்பதிவு செய்து ஜெயராமன், சிவராமன் மற்றும் சந்திரசேகர் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.17 லட்சத்து 75 ஆயிரம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைதான 3 பேரையும் ஊத்துக்குளி கோர்ட்டில் ஆஜர் படுத்தி அவினாசி சிறையில் அடைத்தனர். 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை 10 சதவீத கமிஷனுக்காக மாற்றித்தருவதாக ரூ.30 லட்சம் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story