ஜாமீனில் வந்து தலைமறைவானவர் 13 ஆண்டுகளுக்கு பின் கைது


ஜாமீனில் வந்து தலைமறைவானவர் 13 ஆண்டுகளுக்கு பின் கைது
x

அண்ணன் கொலை வழக்கில் ஜாமீனில் வந்து தலைமறைவானவர் 13 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.

வேலூர்

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரை அடுத்து பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட கட்டியாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38). இவர், கடந்த 2008-ம் ஆண்டு ஜமுனாமரத்தூரில் உள்ள உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது சுரேசுக்கும், அவரது உறவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது சுரேஷின் அண்ணன் சுவாமிநாதன் தகராறில் ஈடுபட்ட தம்பியை தடுத்து கண்டித்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவா், அண்ணனை தாக்கியுள்ளார். இதில், சுவாமிநாதன் உயிரிழந்தார். இந்த வழக்கில் கைதான சுரேஷ் கடந்த 2010-ம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவாக இருந்து வந்தார். இதுதொடர்பாக திருப்பத்தூர் கோர்ட்டு அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது.

தொடர்ந்து போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் வேப்பங்குப்பம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒடுகத்தூர் பகுதியில் சுற்றித்திறிந்த சுரேசை கைது செய்து, திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவாக இருந்தவர் 13 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.


Next Story