சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உறவினர் போக்சோ சட்டத்தில் கைது


சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உறவினர் போக்சோ சட்டத்தில் கைது
x

தஞ்சையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உறவினரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்

தஞ்சையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உறவினரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

உறவினர் வீட்டில்...

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியை சேர்ந்த 36 வயது பெண் தனது 15 வயது மகளை தஞ்சையில் உள்ள தனது உறவினரான இதயதுல்லா(வயது 37) என்பவர் வீட்டில் தங்க வைத்திருந்தார். சம்பவத்தன்று சிறுமிக்கு இதயதுல்லா பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அந்த சிறுமி இதயதுல்லாவின் மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் அதனை பொருட்படுத்தாமல், யாரிடமும் தெரிவிக்க கூடாது என்று சிறுமியிடம் கூறியதாக தெரிகிறது.

கைது

தொடர்ந்து பாலியல் தொல்லை அதிகரித்ததால் பொறுத்துக் கொள்ளமுடியாத சிறுமி தனது தாயிடம் கூறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், தஞ்சை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீசார், இதயதுல்லா மற்றும் அவருடைய மனைவி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இதயதுல்லாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story