தம்பி மீது பொய் புகார் கொடுத்த வாலிபர் கைது


தம்பி மீது பொய் புகார் கொடுத்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 25 Jan 2023 7:00 PM GMT (Updated: 2023-01-26T00:30:53+05:30)

தம்பி மீது பொய் புகார் கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம் அருகே உள்ள அண்டர்காட்டில் வசிப்பவர் வடிவழகன் (வயது22). இவருடைய அண்ணன் வேதராசு (32). சம்பவத்தன்று வேதராசு தனது தம்பி வடிவழகனிடம் வெளியில் செல்ல மோட்டார் சைக்கிள் கேட்டுள்ளார். அதற்கு வடிவழகன் மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த வேதராசு கத்தியால் மோட்டார் சைக்கிளின் சீட்டை கிழித்து உள்ளார். அப்போது சீட்டில் இருந்த கம்பி அவரது கையை கிழித்து விட்டது. உடனடியாக அவருக்கு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் வேதராசு தன்னை வடிவழகன் தாக்கிவிட்டதாக வேதாரண்யம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் விசாரணை நடத்தினர். விசாரணையில் வேதராசு தனது தம்பி வடிவழகன் மீது பொய் புகார் கொடுத்ததது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வேதராசுவை கைது செய்தனர்.


Next Story