கல்குவாரி மேற்பார்வையாளரை தாக்கியவர் கைது
கல்குவாரி மேற்பார்வையாளரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார். 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூசி
கல்குவாரி மேற்பார்வையாளரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார். 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
வெம்பாக்கம் தாலுகா மேனலூர் கிராமத்தில் கல்குவாரி உள்ளது. இந்த குவாரிகளுக்கு வரும் லாரிகளை அதே ஊரில் உள்ள பஜனை கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் சந்துரு குமார் மற்றும் பல்லாவரம் கிராமத்தைச் சேர்ந்த அன்னப்பன் மகன் அரவிந்த,் தயாளன் மகன் விமல் ஆகியோர் மறித்து டிரைவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.அப்போது அந்த வழியாக வந்த கல்குவாரியில் மேற்பார்வையாளராக பணியாற்றும் சத்யராஜ் அவர்களிடம் கேட்டபோது எங்களுக்கு ரூ.2 லட்சம் மாமுல் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் கல்குவாரி நடத்த விட மாட்டோம் என கூறி சத்யராஜை கத்தி முனையில் மிரட்டி தாக்கியயுள்ளனர்.
இது குறித்து தூசி போலீசில் சத்தியராஜ் புகார் அளித்தார். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு வழக்குப்பதிவு செய்து சந்துருகுமாரை கைது செய்தார். அரவிந்த், விமல் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.