கோத்தகிரி அருகே இரும்புக்கம்பியால் உறவினரை தாக்கியவர் கைது


கோத்தகிரி அருகே இரும்புக்கம்பியால் உறவினரை தாக்கியவர் கைது
x
தினத்தந்தி 13 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-14T00:17:05+05:30)

கோத்தகிரி அருகே இரும்புக்கம்பியால் உறவினரை தாக்கியவர் கைது

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி சோலூர்மட்டம் அருகே உள்ள கடசோலை சேலரை கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவரது மகன் ரவி (வயது 42). இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். அதே கிராமத்தைச் சேர்ந்த ரங்கசாமி என்பவரது மகன் குமார் (வயது32). இருவரும் உறவினர்கள். இந்நிலையில் குமார், போலீசாரிடம் ரவி கடையில் வைத்து போதைப் பொருளை விற்பனை செய்து வருவதாக புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவு ரவி தனது வீட்டில் இருந்தவாறு, தன்னைப் பற்றி போலீசாரிடம் குமார் பொய் புகார் அளித்ததாகக் கூறி சத்தம் போட்டுள்ளார். அதைக் கேட்கச் சென்ற குமாரை இரும்புக் கம்பியால் தலையில் தாக்கி, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அவர் சோலூர்மட்டம் போலீசில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் யாதவகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து ரவியை கைது செய்தார்.


Next Story