மோட்டார்சைக்கிள் பெட்டியை உடைத்து நகை திருடியவர் கைது


மோட்டார்சைக்கிள் பெட்டியை உடைத்து நகை திருடியவர் கைது
x

நெல்லையில் மோட்டார்சைக்கிள் பெட்டியை உடைத்து நகை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை பேட்டை கோடீஸ்வரன் நகரை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 39). இவர் கடந்த 22-ந் தேதி நெல்லை சந்திப்பு பகுதியில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். அந்த மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியை உடைத்து அதிலிருந்த 28 கிராம் தங்க நெக்லஸ், 17 கிராம் நெக்லஸ், 2 ஏ.டி.எம். கார்டு, ஆதார் கார்டு ஆகியவற்றை மர்மநபர் திருடி சென்று விட்டார்.

இதுகுறித்து மாரியப்பன் நெல்லை சந்திப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்து விசாரணை நடத்தினர். அதில், நெல்லை டவுன் மகிழ்வண்ணநாதபுரத்தை சேர்ந்த முருகன் (வயது 60) என்பவர் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் முருகனை கைது செய்து அவரிடம் இருந்து 45 கிராம் நகையை பறிமுதல் செய்தனர்.


Next Story