வாலிபரிடம் ரூ.1¾ லட்சம் மோசடி செய்தவர் கைது


வாலிபரிடம் ரூ.1¾ லட்சம் மோசடி செய்தவர் கைது
x

வாலிபரிடம் ரூ.1¾ லட்சம் மோசடி செய்தவர் கைது

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டம் பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சாம்சன் (வயது 28). இவருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக அவருடைய கல்லூரி நண்பரான சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த முஜிபுர் ரஹ்மான் (26) ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்தை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சாம்சன் புகார் மனு அளித்தார். இந்த மனு தொடர்பாக விசாரணை நடத்த சைபர் கிரைம் போலீசுக்கு, போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன்மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வசந்தி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து முஜிபுர் ரஹ்மானை கைது செய்தனர்.


Next Story