புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்தவர் கைது


புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்தவர் கைது
x

குலசேகரன்பட்டினத்தில் கடையில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்தவரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் உடன்குடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது உடன்குடி கிறிஸ்தியா நகரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் குலசேகரன்பட்டினத்தை சேர்ந்த முருகன் மகன் இசக்கிமுத்து (வயது 32) என்பவரது கடையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story