கிராம நிர்வாக அலுவலரை மிரட்டியவர் கைது
சுத்தமல்லியில் கிராம நிர்வாக அலுவலரை மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி
பேட்டை:
சுத்தமல்லியில் கிராம நிர்வாக அலுவலராக மகாராஜன் (வயது 34) பணியாற்றி வருகிறார். நேற்று இவரது அலுவலகத்திற்கு வந்த சுத்தமல்லி வ.உ.சி.நகர் 1-வது தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் அழகு மணிமேகலை சந்திரன் என்பவர், தனது தாத்தா பெயரில் உள்ள இடத்திற்கு ரசீது போட்டுக் கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் முறையான தனிப்பட்டா உங்களது பெயருக்கு பெற்று வாருங்கள். நான் செய்து தருகிறேன் என்று கூறியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே அழகு மணிமேகலை சந்திரன், கிராம நிர்வாக அலுவலரை அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் சுத்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் வழக்குப்பதிவு செய்து அழகு மணிமேகலை சந்திரனை கைது செய்தார்.
Related Tags :
Next Story