சாராயம் விற்ற வாலிபர் கைது


சாராயம் விற்ற வாலிபர் கைது
x

மணல்மேடு அருகே சாராயம் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்

மயிலாடுதுறை

மணல்மேடு:

மணல்மேட்டை அடுத்த தாழஞ்சேரி கிராமத்தில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக மணல்மேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு குறும்பப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் குமார் (வயது 31) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.


Next Story