நர்சிடம் தங்க சங்கிலி பறித்தவர் கைது


நர்சிடம் தங்க சங்கிலி பறித்தவர் கைது
x

நர்சிடம் தங்க சங்கிலி பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி

மரவனூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி வருபவர் சிந்துஜா மேரி. இவர் கடந்த மாதம் மரவனூர் பஸ் நிறுத்தம் அருகே நின்ற போது, மர்ம ஆசாமி அவர் அணிந்து இருந்த தங்க சங்கிலியை பறித்து சென்றுவிட்டார். இது குறித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வந்தனர். இந்த நிலையில் புங்கனூர் காந்தி நகரைச் சேர்ந்த கிரிநாதன் (வயது 45) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நர்சிடம் சங்கிலி பறித்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து 3 பவுன் தங்க சங்கிலியை கைப்பற்றினர்.


Next Story