ஆடு மேய்த்த பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்தவர் கைது
ஆடு மேய்த்த பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி
ஜீயபுரம், ஜூன்.8-
ஆடு மேய்த்த பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
சங்கிலி பறிப்பு
ெபட்டவாய்த்தலை அருகே உள்ள பெருகமணி கிராமத்தை சேர்ந்தவர் ராமநாதன். இவருடைய மனைவி அம்சவள்ளி (வயது 50). சம்பவத்தன்று இவர் பெருகமணி சுடுகாடு பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது, மர்ம நபர் ஒருவர் அம்சவள்ளியில் கழுத்தில் கிடந்த ஒரு பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்று விட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் பெட்டவாய்த்லை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அம்சவள்ளியிடம் நகையை பறித்து சென்றது புலிவலத்தை சேர்ந்த சூர்யா (25) என தெரியவந்தது. இதனையடுத்து நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story