கள்ளக்குறிச்சி அருகே விவசாயியை கத்தியால் குத்தியவர் கைது
கள்ளக்குறிச்சி அருகே விவசாயியை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி அருகே பெரியசிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரி (வயது 52), விவசாயி. இவருடைய மகன் மணிகண்டன். இவரும் வாணவரெட்டி கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் தொடர்பாக இருதரப்பினரிடையே விளம்பாா் கிராமத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது ஆத்திரமடைந்த பெண்ணின் தரப்பை சேர்ந்த எம்.ஜி.ஆர். (43) என்பவர், மாரியை கத்தியால் குத்திவிட்டார். இதில் பலத்த காயமடைந்த மாரி கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து, எம்.ஜி.ஆரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story