சலவை தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபர் கைது


சலவை தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபர் கைது
x

திருப்பத்தூரில் சலவை தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர்

திருப்பத்துார்

திருப்பத்தூர் துரைநகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 40). இவருக்கும் அவரது சகோதரி மகன் கார்த்திக் (23) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் குடிபோதையில் இருந்த கார்த்திக், வெங்கடேசனிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது அவரது வீட்டில் இருந்த உறவினர் பாச்சல் கிராமத்தைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி அச்சுதன் (47) என்பவர், எதற்காக மாமா வீட்டில் வந்து குடித்துவிட்டு தகராறு செய்கிறாய் என கேட்டுள்ளார்.

அதில் ஆத்திரமடைந்த கார்த்திக் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அச்சுதனை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அச்சுதனை அங்கிருந்தவர்கள் மீட்டு திருப்பத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், திருப்பத்துார் டவுா் போலீசார் வழக்குப் பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.


Next Story