சின்னசேலம் அருகே லாரி டியூப்பில் சாராயம் பதுக்கியவர் கைது
சின்னசேலம் அருகே லாரி டியூப்பில் சாராயம் பதுக்கியவர் கைது செய்யப்பட்டாா்.
கள்ளக்குறிச்சி
சின்னசேலம்,
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கள்ளச்சாரயம் கடத்தல், காய்ச்சுதல் மற்றும் விற்பனை செய்வோரை கைது செய்ய தனிப்படை அமைத்து கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் தனிப்படை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திக், சின்னசேலம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் போலீசார் சின்னசேலம் அடுத்த காட்டனந்தல் கிராமத்தில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது காட்டனந்தல் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கந்தசாமி மகன் பரமசிவம் (வயது 35) என்பவர் தனது வீட்டின் பின்புறம் 3 லாரி டியூப்களில் விற்பனைக்காக சாராயம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பரமசிவத்தை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த 165 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story