கன்டெய்னர் லாரியில் இருந்து 96 கார் டயர்களை திருடியவர் கைது


கன்டெய்னர் லாரியில் இருந்து 96 கார் டயர்களை திருடியவர் கைது
x

போளூர் அருகே லாரி கதவை உடைத்து 96 கார் டயர்களை திருடிய லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை

போளூர்

போளூர் அருகே லாரி கதவை உடைத்து 96 கார் டயர்களை திருடிய லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கார் டயர்கள் திருட்டு

சென்னை ராயபுரத்தில் இயங்கி வரும் டிரான்ஸ்போர்ட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டி என்ற ஊரில் இருந்து 607 கார் டயர்களை ஏற்றிக் கொண்டு கோவைக்கு கன்டெய்னர் லாரி ஒன்று சென்றது.

இந்த லாரியை திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே வில்வாரணியை சேர்ந்த குப்புசாமி என்ற டிரைவர் ஓட்டி வந்தார்.

கடந்த 25-ந் தேதி இரவு 11.30 மணி அளவில் போளூர் அருகே பாக்மார்பேட்டை கூட்ரோடில் ஒரு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு, லாரியில் குப்புசாமி படுத்து தூங்கினார்.

மறுநாள் காலை 5.30 மணிக்கு எழுந்து பார்த்தபோது லாரி பின்புறம் கதவின் சீல், பூட்டு உடைத்து மர்ம நபர்கள் 96 கார் டயர்களை திருடி சென்றது தெரிய வந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் ஆகும்.

இதுகுறித்து குப்புசாமி டிரான்ஸ்போர்ட் நிர்வாகிக்கு தெரிவித்தார். உடனே அவர் போளூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒருவர் கைது

இந்த நிலையில் இன்று அதிகாலை இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் தலைமையில் போலீசார் போளூர் அருகே வசூர் கூட்ரோடில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வேகமாக வந்த லாரியை மடக்கி சோதனை செய்தபோது அதில் 96 கார் டயர்கள் இருந்தன.

விசாரணையில், லாரியை ஓட்டி வந்தவர் சென்னை திருவொற்றியூரை சேர்ந்த பழனிசாமி (வயது 46) என்பதும், குப்புசாமி ஓட்டி வந்த லாரியில் இருந்து டயர்களை திருடியதையும் அவர் ஒப்புகொண்டார்.

இதையடுத்து அவரை போலீசார் கைது கைது செய்து, 96 கார் டயர்களை பறிமுதல் செய்தனர். மேலும் பழனிசாமியுடன் திருட்டில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த டேவிட், முத்து ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கைதான பழனிசாமி இதுபோல் கன்டெய்னர் லாரிகளில் பூட்டை உடைத்து பல பொருட்கள் திருடியதாக கூறப்படுகிறது. போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story