வாலிபரிடம் செல்போன் திருடியவர் கைது


வாலிபரிடம் செல்போன் திருடியவர் கைது
x

வாலிபரிடம் செல்போன் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் மெய்யகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாரதிராஜா (வயது 27). இவருடைய மனைவி கஸ்தூரி திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் பாரதிராஜா பிரசவ வார்டில் இருந்த மனைவியுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது தென்னூர் ஆழ்வார் தோப்பு பகுதியை சேர்ந்த முகமதுசலீம் (40) என்பவர் பாரதிராஜாவின் சட்டை பையில் இருந்த செல்போனை திருடிக்கொண்டு தப்பி ஓடமுயற்சித்தார். இதை கண்ட பாரதிராஜா அக்கம்பக்கத்தினர் உதவியுடன் முகமதுசலீமை பிடித்து அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது சலீமை கைது செய்தனர்.


Next Story