பொருள் வாங்குவதாக நடித்து நகைகளை திருடியவர் கைது


பொருள் வாங்குவதாக நடித்து நகைகளை திருடியவர் கைது
x

ஒடுகத்தூர் அருகே கணவருக்கு தெரியாமல், ஆண் நண்பருக்கு கொடுத்த நகை, பணத்தை திருப்பி கொடுக்காததால், ராணுவ வீரரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர்

நகை, பணம் கொடுத்தார்

ஒடுகத்தூரை அடுத்த எல்லப்பன் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கேசவன். இவரது மகன் பாலாஜி (வயது 38). ராணுவ வீரர். இவரது மனைவி ரேகா (35). இந்த நிலையில் மராட்டி பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் குமரேசனுக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டதால் நட்பு ரீதியாக ரேகாவிடம் கேட்டுள்ளார். ரேகாவும் கணவருக்கு தெரியாமல் அவரிடம் இருந்த 11.5 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் கொடுத்ததாக கூறப்ப்டுகிறது. பின்னர் பலமுறை குமரேசனிடம், ரேகா நகை மற்றும் பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதற்கு குமரேசன் காலம் கடத்தி வந்துள்ளார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இது குறித்து ரேகா வேப்பங்குப்பம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரை பதிவு செய்த போலீசார் குமரேசனை அழைத்து உடனடியாக ரேகாவிடம் வாங்கிய நகை மற்றும் பணத்தை கொடுக்கும்படி உத்தரவிட்டனர். குமரேசனும் கடந்த 17-ந் தேதி நகை, பணத்தை போலீஸ் நிலையத்தில் ஒப்படைப்பதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் இதுவரையில் நகை, பணத்தை ஒப்படைக்க வில்லை.

இதனால் ரேகாவிற்கும் அவரது கணவர் பாலாஜிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மன உளைச்சல் அடைந்த ரேகா வீட்டில் உள்ள மின்விசிறியல் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்ததும் வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரேகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து பாலாஜி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story