ராமநத்தம் அருகே மின்மோட்டாரில் ஒயர் திருடியவர் கைது


ராமநத்தம் அருகே மின்மோட்டாரில் ஒயர் திருடியவர் கைது
x
தினத்தந்தி 12 Jun 2023 12:15 AM IST (Updated: 12 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ராமநத்தம் அருகே மின்மோட்டாரில் ஒயர் திருடியவர் கைது செய்யப்பட்டாா்.

கடலூர்

ராமநத்தம்,

ராமநத்தம் அடுத்த ஆ.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன். விவசாயி. இவர் நேற்று காலை அதே பகுதியில் தனது நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். அப்போது வயலில் மின்மோட்டாரில் இருந்த ஒயரை காணவில்லை. இதையடுத்து அதை தேடி பார்த்தபோது, கருப்பையா கோவில் அருகே அதே ஊரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் மணிவாசகம் (வயது 19), அவரது நண்பர் முஸ்தபா மகன் அப்துல் முனப் ஆகியோர் ஒயரை வைத்து கொண்டிருந்தனர். சந்திரன் வருவதை பார்த்த அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதையடுத்து அவர் விரைந்து சென்று மணிவாசகத்தை மட்டும் பிடித்தார். அப்துல்முனப் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து பிடிபட்ட மணிவாசகம் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிவாசகத்தை கைது செய்தனர். தப்பி ஓடிய அப்துல் முனப்பை தேடி வருகின்றனர்.


Next Story