நாமகிரிப்பேட்டையில் கிணற்றில் ஆண் பிணம்; யார் அவர்? போலீசார் விசாரணை


நாமகிரிப்பேட்டையில் கிணற்றில் ஆண் பிணம்; யார் அவர்? போலீசார் விசாரணை
x

நாமகிரிப்பேட்டையில் கிணற்றில் ஆண் பிணமாக கிடந்தார்.

நாமக்கல்

நாமகிரிப்பேட்டை:

நாமகிரிப்பேட்டையில் விவசாய கிணற்றில் ஆண் பிணம் ஒன்று தண்ணீரில் மிதந்தது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நாமகிரிப்பேட்டை போலீஸ் மற்றும் ராசிபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் மிதந்த பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கிணற்றில் பிணமாக கிடந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story