தர்மபுரி, பென்னாகரத்தில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி


தர்மபுரி, பென்னாகரத்தில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி
x
தினத்தந்தி 12 Oct 2022 12:15 AM IST (Updated: 12 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி, பென்னாகரத்தில் பல்வேறு கட்சிகளின் சார்பில் ஜனநாயகத்தை காக்க வலியுறுத்தி சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெற்றது.

மனித சங்கிலி

ஜனநாயகத்தை காக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பில் நேற்று சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., தமிழக வாழ்வுரிமை கட்சி, திராவிடர் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தர்மபுரியில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்திற்கு முன்னாள் எம்.பி.யும், மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளருமான தீர்த்தராமன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கலைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் நந்தன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் தங்கராஜ், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் பிரசாந்த், திராவிடர் கழகம் நிர்வாகி தமிழ் பிரபாகரன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் ஜபேதார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் அன்வர் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோஷங்கள்

தர்மபுரி 4 ரோடு முதல் நடைபெற்ற இந்த மனித சங்கிலி போராட்டத்தின் போது ஜனநாயகத்தை காக்க வேண்டும், மதத்தின் பெயரால் மக்களை பிரிக்க கூடாது, மக்களின் ஒற்றுமையை பாதுகாப்போம் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் நரேந்திரன், ஜெய்சங்கர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி தேவராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் ஜோதிபாசு, அர்ஜூனன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஜெயந்தி, மாவட்ட நிர்வாகிகள் சக்தி, கரிகாலன், திராவிடர் கழக நிர்வாகிகள் ஊமை ஜெயராமன், கதிர், கருபாலன் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

பென்னாகரம்

பென்னாகரத்தில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெற்றது. பென்னாகரம் பழைய பஸ் நிலையம் முன்பு தொடங்கிய இந்த மனித சங்கிலியில் பென்னாகரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான ந.நஞ்சப்பன், மாவட்ட செயலாளர் கலைசெல்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கருப்பண்ணன், பென்னாகரம் ஒன்றிய செயலாளர் குண்டு சரவணன், பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சந்தோஷ்குமார் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல் அரூரிலும் பல்வேறு கட்சிகளில் சார்பில் மனித சங்கிலி நடந்தது. இதில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story