தூக்க மாத்திரைகள் தின்ற கொத்தனார் சாவு


தூக்க மாத்திரைகள் தின்ற கொத்தனார் சாவு
x
தினத்தந்தி 26 Feb 2023 12:30 AM IST (Updated: 26 Feb 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

தூக்க மாத்திரைகள் தின்ற கொத்தனார் இறந்தார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே நல்லத்துகுடி கீழத்தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 48). கொத்தனார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. சம்பவத்தன்று மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த செந்தில்குமார் சாப்பிட்ட பின்னர் தூக்க மாத்திரைகளை தின்றார். சற்று நேரத்தில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவருடைய மனைவி நளினி (42) கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story