கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கைது
தூத்துக்குடியில் கொலை முயற்சியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த பெரியசாமி மகன் கோமதி தயாளன் (வயது 48). சம்பவத்தன்று இவரும், தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ஜெயராம பாண்டியன் மகன் மோகன் என்ற மோகன்ராஜ் (39) என்பவரும் சேர்ந்து மதுகுடித்துக் கொண்டு இருந்தார்களாம். அப்போது அவர்களுக்கு இடையே பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த மோகன் என்ற மோகன்ராஜ், கிருஷ்ணராஜபுரத்தில் வந்து கொண்டு இருந்த கோமதி தயாளனை வழிமறித்து, கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரபிசுஜின்ஜோஸ் வழக்குப்பதிவு செய்து மோகன் என்ற மோகன்ராஜை கைது செய்தார். கைது செய்யப்பட்ட மோகன் என்ற மோகன்ராஜ் மீது 32 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story