மொபட் திருடிய வாலிபருக்கு தர்மஅடி


மொபட் திருடிய வாலிபருக்கு தர்மஅடி
x
தினத்தந்தி 10 Aug 2023 1:30 AM IST (Updated: 10 Aug 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

அய்யலூர் அருகே மொபட் திருடிய வாலிபரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

திண்டுக்கல்

வாலிபருக்கு தர்ம அடி

வடமதுரை அருகே உள்ள அய்யலூர் சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் நடராஜன் (வயது 50). இவர், அய்யலூர் பேரூராட்சி வணிக வளாகத்தில் இஸ்திரி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை இவர், தனது மொபட்டை கடை முன்பு நிறுத்தியிருந்தார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அங்கு நிறுத்தப்பட்டிருந்த மொபட் மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நடராஜன், பக்கத்து கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார்.

அதில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மொபட்டை திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அதேநபர், அய்யலூர் கடவூர் பிரிவு அருகே திண்டுக்கல்-திருச்சி நான்கு வழிச்சாலையோரத்தில் ஒரு கடை முன்பு நிறுத்தி இருந்த மற்றொரு மொபட்டை திருடினார். இதனைக்கண்ட பொதுமக்கள் அவரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீசார் அங்கு விரைந்தனர். இதனையடுத்து அந்த நபர், போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே உள்ள இளமனம் பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. இவர், தனது கூட்டாளிகள் 2 பேருடன் சேர்ந்து மொபட்டுகளை திருடியது தெரியவந்தது. இவர் பொதுமக்களிடம் சிக்கியதை அறிந்த மற்ற 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story