சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பியவர் கைது


சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பியவர் கைது
x

சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பியவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 18 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர்

வேலூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் போலீசார் வேலூர் கஸ்பா, டிட்டர் லைன் பகுதியில் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது உயிருக்கு அபாயகரமான, விபத்து ஏற்படுத்தும் வகையில் எந்த ஒரு உரிமமும் இல்லாமல் பாதுகாப்பு சாதனங்கள் ஏதுமின்றி சிலிண்டரில் கியாஸ் நிரப்பிக் கொண்டு இருந்த தாஜித்தின் (வயது 51) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து வீட்டு உபயோக 18 சிலிண்டர்கள், கியாஸ் நிரப்ப வைத்திருந்த மிஷின், எடை போடும் கருவி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story