சோளிங்கர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்


சோளிங்கர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்
x

சோளிங்கர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் பள்ளி தலைமை ஆசிரியர் மேரிஷேரின் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக நகராட்சி தலைவர் தமிழ்செல்வி கலந்துகொண்டு. அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்தும், மாணவர்களின் ஒழுக்கம், சுற்றுப்புற சூழல் குறித்து விவாதித்தார். அதனைத் தொடர்ந்து பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர், உறுப்பினர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசினார்.

அப்போது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இருவருமே மாணவர்களை கண்காணிக்க வேண்டும் என கூறினார். நகராட்சி உறுப்பினர்கள் சுசீலா, அன்பரசு, அசோகன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story