ஜமீன் அகரம் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்
ஜமீன் அகரம் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.
வேட்டவலம்
ஜமீன் அகரம் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.
வேட்டவலத்தை அடுத்த ஜமீன் அகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் தலைவர் செண்பகம் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் சித்ரா முன்னிலை வகித்தார். ஆசிரியர் பிரதிநிதி மணிமேகலை வரவேற்றார். தலைமை ஆசிரியர் முருகன் கூட்டத்தின் நோக்கங்களை விளக்கிப் பேசி தீர்மானங்களை முன்மொழிந்தார்.
மாணவர்களின் இடைநிற்றலைத் தவிர்த்தல், பள்ளிப் பாதுகாப்பு மற்றும் உட்கட்டமைப்பு, மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு, பள்ளி வளாகத் தூய்மை ஆகியவற்றை குறித்து விவாதிக்கப்பட்டது. இல்லம் தேடிக் கல்வி மையத்தினை பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் அவ்வப்போது பார்வையிடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்றனர். முடிவில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர் அன்பரசி நன்றி கூறினார்.