அரசு பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டம்


அரசு பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டம்
x

அரசு பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, லெப்பைக்குடிக்காடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியை மகாலட்சுமி தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழுவின் தலைவர் ராபியத்துல் பசிரியா, பள்ளியின் சுற்றுப்புற தூய்மை மற்றும் மாணவிகளுக்கான மருத்துவம் தொடர்பானவை குறித்து உறுப்பினர்களிடம் விவாதித்து முடிவு செய்தார்.

இதேபோல் ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பொன்னுத்துரை தலைமையில் நடந்தது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவிதா பள்ளியில் செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் குறித்தும், இன்று (செவ்வாய்க்கிழமை) உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்தில் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் கேட்டு போடப்பட்ட தீர்மானங்கள் சமர்பிக்கப்படவுள்ளது குறித்தும் தெரிவித்தார்.


Next Story