பேரிடர் மீட்பாளர்களுக்கு மேலாண்மை பயிற்சி


பேரிடர் மீட்பாளர்களுக்கு மேலாண்மை பயிற்சி
x

புவனகிரியில் பேரிடர் மீட்பாளர்களுக்கு மேலாண்மை பயிற்சி நடைபெற்றது.

கடலூர்

புவனகிரி,

புவனகிரி தாலுகா அலுவலகத்தில் குறுவட்ட அளவிலான முதல் நிலை பேரிடர் மீட்பாளர்களுக்கு மேலாண்மை பயிற்சி நடந்தது. இதற்கு புவனகிரி தாசில்தார் ரம்யா தலைமை தாங்கினார். மண்டல தாசில்தார் பிரகாஷ் முன்னிலை வகித்தார். குறுவட்ட வருவாய் ஆய்வாளர் கவிதா வரவேற்றார். இந்த பயிற்சியை தலைமையிடத்து துணை தாசில்தார் ரத்தினகுமார், பேரிடர் மேலாண்மை வருவாய் ஆய்வாளர் சஞ்சய் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இதில் பேரிடர் காலங்களில் எவ்வாறு மீட்பு பணியில் ஈடுபடுவது, மனிதர்களை மட்டுமின்றி கால்நடைகளையும் எவ்வாறு மீட்டு கொண்டு வருவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் மேல் புவனகிரி, புவனகிரி, சுத்துக்குழி, பூதவராயன்பேட்டை, க.ஆலம்பாடி, கீழமணக்குடி ஆகிய கிராமங்களில் இருந்து தன்னார்வலர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.


Next Story