மணப்பாடு கலங்கரை விளக்கை பார்த்து ரசித்த மக்கள்


மணப்பாடு  கலங்கரை விளக்கை   பார்த்து ரசித்த மக்கள்
x
தினத்தந்தி 22 Sept 2022 12:15 AM IST (Updated: 22 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மணப்பாடு கலங்கரை விளக்கை புதன்கிழமை மக்கள் பார்த்து ரசித்தனர்.

தூத்துக்குடி

உடன்குடி:

மணப்பாடு கடற்கரையில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் கலங்கரை விளக்கும் அதன் அருகில் கடற்கரை ஊடுருவலை தடுக்க உயரமான கண்காணிப்பு கேமராவும் நிறுவப்பட்டுள்ளது. 124 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த விளக்கு கப்பல் மற்றும் கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்து வருகிறது.

95- ஆவது கலங்கரை விளக்க தேசியதினத்தை ஒட்டி நேற்று மட்டும் பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டது. காலை 9 மணி அளவில் பொறுப்பு அதிகாரி மதனகோபால் தலைமையில் கொடியேற்றினார். உதவியாளர் பிரபு, செந்தில் குமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஏராளமான பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலங்கரை விளக்கை பார்வையிட்டு ரசித்து மகிழ்ந்தனர்.


Next Story