மணப்பாடு திருச்சிலுவை நாதர் ஆலயமகிமை பெருவிழா சிறப்பு திருப்பலி


மணப்பாடு திருச்சிலுவை நாதர் ஆலயமகிமை பெருவிழா சிறப்பு திருப்பலி
x
தினத்தந்தி 15 Sept 2023 12:15 AM IST (Updated: 15 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மணப்பாடு திருச்சிலுவை நாதர் ஆலய மகிமை பெருவிழா சிறப்பு திருப்பலி நடந்தது.

தூத்துக்குடி

உடன்குடி:

மணப்பாடு திருச்சிலுவை நாதர் ஆலயத்தின் மகிமைப் பெருவிழாவை முன்னிட்டு நேற்று நடந்த சிறப்பு திருப்பலியில் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.

கொடியேற்றம்

தென்தமிழகத்தின் பிரசித்திப் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான மணப்பாடு திருச்சிலுவை நாதர் ஆலயத்தின் 444-வது மகிமை பெருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொங்கியது. மறுநாள் முதல் செப்.12-ந் தேதிவரை விழா நாட்களில் காலை 6.30 மணிக்கு திருப்பலி நடந்தது. நேற்று காலை 6.30 மணி திருப்பலிக்கு பின் ஐந்து திருக்காய சபையின் பொறுப்பாளர்கள் தேர்வும், மாலை 4.30 மணிக்கு திருச்சிலுவை ஆலயத்தில் மலையாளத் திருப்பலி நடைபெற்றது.

ஆயருக்கு வரவேற்பு

மாலை 6.30 மணிக்கு வருகை தந்த தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகைக்கு சிறப்பு வரவேற்பு கொடுக்கப்பட்டது. இரவு 7மணிக்கு ஆயர் தலைமையில் மகிமை பெருவிழா நடந்தது. மாலையில் ஆராதனை, மறையுரை மெய்யான திருச்சிலுவை ஆசீர ்நடந்தது. இதில் சுற்றுப்புற பகுதியில் உள்ள ஏராளமான சபை குருமார்கள் மற்றும் தமிழகம் கேரளாவில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.

நேற்று காலை 4 மணிக்கு ஆலயத்தில் திருப்பலியும், காலை 5 மணிக்கு மலையாளத்தில் திருப்பலியும், காலை 6 மணிக்கு ஆலயத்தை சுற்றி திவ்ய ஐந்து திருக்காய சபையினர் பவனி நடந்தது. தொடர்ந்து ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் பெருவிழா திருப்பலி நடைபெற்றது. ஐந்து திருக்காய சபையின் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். மெய்யான திருச்சிலுவை ஆசீர் நடந்தது. காலை 11 மணிக்கு ஆலயத்தில் திருப்பலி, மாலை 4 மணிக்கு பங்கு ஆலயத்தில் நற்கருணை ஆசீர், மெய்யான திருச்சிலுவை முத்தம் செய்தல், மாலை 5.30 மணிக்கு கொடியிறக்கம திருப்பலி நடந்தது.

இன்று

இன்று(வெள்ளிக்கிழமை) புனித வியாகுல அன்னை திருவிழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு பங்கு ஆலயத்தில் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு திருச்சிலுவை ஆலயத்தில் திருப்பலி நடக்கிறது. ஏற்பாடுகளை அருள் பணியாளர்கள், புனித யாகப்பர் ஆலய நலக்கமிட்டி, மணப்பாடு கிறிஸ்தவ மக்கள் செய்திருந்தனர்.


Next Story